Skip to main content

youtube

மீண்டும் கதாநாயகியானார் சிம்ரன்


முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். பின்னர் 'ஆஹா கல்யாணம்' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் சிம்ரன். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதுதவிர ஜெகதீஷ்குமார் இயக்கத்தில் 'கரையோரம்' எனும் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் சிம்ரன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்ரனின் கணவர் தீபக்கின் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார் சிம்ரன். பாலிவுட்டில் ராணி முகர்ஜி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் 'மர்தாணி'. இதில் ராணி முகர்ஜி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

விளம்பரப் படங்களை இயக்கி வந்த கௌரி சங்கர் இப்படத்தின் மூலம் சினிமா இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
News source :maalaimalar

Comments