Skip to main content

youtube

வருகிற 8–ந்தேதி பாபிசிம்ஹா–ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம்

ஜிகிர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. சமீபத்தில் வெளியான மசாலா படத்தில் வில்லனாக நடித்தார்.

தற்போது கோ–2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். ‘உறுமீன்’ படத்தில் பாபிசிம்ஹா ஜோடியாக ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனன் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பாபிசிம்ஹா– ரேஷ்மிமேனன் நெருங்கி பழகினார்கள்.

காதல் பற்றி கேட்டால் இருவரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர். இப்போது இவர்கள் காதல், திருமணத்தை நெருங்கி இருக்கிறது.

பாபிசிம்ஹா– ரேஷ்மி மேனன் திருமணத்தை இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் நடைபெறுகிறது. இருவரும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

news source:maalaimalar

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA